கொள்ளு ரசம்: நம்ம சென்னையின் ‘கட்டு’க்கோப்பை காக்கும் ரகசியம்!
வணக்கம் சென்னை ரோட்டரியன்ஸ்!
“இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு”ன்னு ஒரு பழமொழி உண்டு. நம்ம சென்னையின் வெயிலுக்கு, கட்டுக்கோப்பா உடம்ப வச்சுக்க கொள்ளு ரொம்ப நல்லதுன்னு எனக்கு தோணுது. அதுவும் நம்ம 3233 மாவட்டத்துல எல்லாரும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கோமே, அவங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அதனால, இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷலான, அதே சமயம் நம்ம ஊர் ஸ்டைல்ல ஒரு கொள்ளு ரெசிபி உங்களுக்காக!
நம்ம ரோட்டரி சங்கத்துல சேவை செய்யறது எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி நம்ம ஆரோக்கியத்தையும் பார்த்துக்கணும் இல்லையா? அதனால, இந்த சுவையான, சத்தான கொள்ளு துவையல் (தொக்கு) & கொள்ளு (கட்டு) ரசம் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள் (நம்ம சென்னையில எல்லா சூப்பர் மார்க்கெட்லயும் ஈஸியா கிடைக்கும்):
- கொள்ளு – 200 கிராம் (நம்ம ஊர்ல இது ‘ஹார்ஸ் கிராம்’னு சொல்வாங்க!)
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- மிளகு – 1/2 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் வற்றல் – 5 (காரத்துக்கு ஏத்த மாதிரி கூட்டிக்கலாம், குறைச்சிக்கலாம்)
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு (நம்ம வீட்டு தோட்டத்துல இருந்தா இன்னும் சூப்பர்!)
- பூண்டு – 1 (நம்ம ஊர் பூண்டு தான் பெஸ்ட்!)
- தக்காளி – 1 (சென்னையோட தக்காளி சட்னி மாதிரி, இதுவும் ஒரு ‘கட்டு’க்கோப்புக்கு!)
- புளிக்கரைசல் – 25 கிராம்
- உப்பு – தேவையான அளவு (நம்ம சென்னை டேஸ்டுக்கு ஏத்த மாதிரி!)
செய்முறை (ஈஸி ஸ்டெப்ஸ்ல):
- முதல்ல, குக்கர்ல கொள்ளு, சீரகம், மிளகு, 1/2 லிட்டர் தண்ணி, உப்பு எல்லாம் போட்டு வேக வைக்கணும். ஒரு 7 விசில் விட்டா போதும், கொள்ளு நல்லா வெந்துடும். (நம்ம டிஸ்ட்ரிக்ட் மீட்டிங் மாதிரி ரெம்ப லேட் ஆகாது டக்குன்னு வெந்துரும் )
- வெந்ததும், கொள்ளு தனியா, அந்த தண்ணிய தனியா வடிகட்டி வச்சுக்கணும். (அந்த தண்ணி தான் ஹீரோ! நம்ம DG போத்ரா ஜி மாதிரி அதான் ‘கட்டு’ ரசம் ஆகப்போகுது!)
- அப்புறம், மிக்ஸி அல்லது அம்மில (நம்ம பாட்டி காலத்து ஸ்டைல்ல!) கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி எல்லாத்தையும் போட்டு அரைச்சு, புளிக்கரைசலோட சேர்த்து அடுப்புல வச்சு கொதிக்க விடணும்.
- இப்போ, வடிகட்டின கொள்ளு தண்ணிய இதுல சேர்த்து, தேவையான உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிட்டா, நம்ம சூப்பர் ‘கட்டு’ ரசம் ரெடி! (இது ஜீரண சக்திக்கு ரொம்ப நல்லதுங்க!)
- கடைசியா, வேக வச்ச கொள்ளு பயிர மிக்ஸில போட்டு, ரெடியான ‘கட்டு’ ரசத்தோட சேர்த்து 80% அரைச்சு துவையல் பதத்துக்கு எடுத்துக்கணும்.
- அவ்வளவுதான்! இப்போ, இந்த துவையல சாதத்துல போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டா, வேற லெவல் டேஸ்டா இருக்கும்! குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்!
கொள்ளு மகிமை:
கொள்ளு ரசம் ஜீரண சக்திக்கு ரொம்ப நல்லது. உடம்ப கட்டுக்கோப்பா வச்சுக்க உதவும். நம்ம முன்னோர்கள் காலத்துல இருந்து கொள்ளு பயன்படுத்திட்டு தான் இருக்காங்க. சமீபத்துல நம்ம கமல்ஹாசன் சார் கூட தன்னோட இளமைக்கு காரணம் இந்த கொள்ளு ரசம் தான்ன்னு ஒரு பேட்டியில சொன்னாரு. அதனால, நம்ம இளைய தலைமுறையினர் கண்டிப்பா இத பயன்படுத்தணும்!
நம்ம சென்னை ரோட்டரியன்ஸ், குறிப்பாக நம்ம நம்ம 3233 மாவட்டத்துல இருக்கிற நண்பர்கள் எல்லாரும் இந்த ரெசிபிய ட்ரை பண்ணி, ஆரோக்கியமா, கட்டுக்கோப்பா இருங்கன்னு நான் கேட்டுக்கிறேன்.
நன்றி!
திருமதி. சரவண செல்வி, தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மெராக்கி.